செல்லாண்டியம்மன் கோவில் விழா: 25 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்
ADDED :2700 days ago
மோகனூர்: ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கோலாகலமாக நடந்தது. மோகனூர் அடுத்த, ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில், சிங்கயகவுண்டன் புதூர், தோப்பூர், மோளக்கவுண்டன்புதூர், நெய்க்காரன்பட்டி, மூங்கில்பட்டி, புதுமாரப்பனூர், கொளத்தூர் ஆகிய ஊர்களுக்கு பாத்தியப்பட்டது. இங்கு, 1993ல் தேர்த்திருவிழா நடந்தது. பல்வேறு காரணங்களால், கடந்த, 25 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு திருவிழா, நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த, 19ல் விழா தொடங்கியது. தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, சுவாமி தூக்குத்தேரில், எட்டு ஊர்களுக்கும் சென்று, அருள்பாலித்தார். பின், பொங்கல், மாவிளக்கு பூஜை, எல்லை உடைக்கும் நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், மக்கள் செய்திருந்தனர்.