உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கட்ரமணர் கோவிலில் ரூ.24.77 லட்சத்துக்கு ஏலம்

வெங்கட்ரமணர் கோவிலில் ரூ.24.77 லட்சத்துக்கு ஏலம்

ஓமலூர்: காடையாம்பட்டி, சின்னதிருப்பதி, வெங்கட்ரமணர் கோவிலில், பல்வேறு உரிம பொது ஏலம் மற்றும் ஒப்பந்தம், நேற்று நடந்தது. அதில், 24.77 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. குறிப்பாக, பிரசாத கடை, ஒன்பது லட்சத்து, 71 ஆயிரம் ரூபாய்,(கடந்த ஆண்டு, எட்டு லட்சத்து, 89 ஆயிரம்), டீக்கடை, ஒரு லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய்(ஒரு லட்சத்து, 53 ஆயிரம்) பூஜை பொருள் கடை, நான்கு லட்சத்து, 56 ஆயிரம் ரூபாய்(நான்கு லட்சத்து, 7,000), வாகன பாதுகாப்பு உரிமம், நான்கு லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய்(மூன்று லட்சத்து, 75 ஆயிரம்), முடி சேகரிப்பு உரிமம், நான்கு லட்சத்து, 52 ஆயிரம் ரூபாய்க்கு(இரண்டு லட்சத்து, 73 ஆயிரம்) ஏலம் போனது. முன்னதாக, கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், இரண்டு லட்சத்து, 78 ஆயிரத்து, 500 ரூபாய் காணிக்கை கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !