லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அளேபுரத்தில், நேற்று நடந்த, லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தர்மபுரி அடுத்த, அளேபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 20ல், கொடியேற்றத்துடன், துவங்கியது. தினமும் பல்வேறு வகையான, சிறப்பு வாகன அலங்காரத்தில், வீதி உலா நடந்தது. கடந்த, 25ல், இரவு, 7:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், கருட உற்சவமும் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, பொதுமக்கள் ஒன்று திரண்டு, தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கொட்டும் மழையிலும், தேரோட்டோம் கோலாகலமாக நடந்ததால், பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்று தேர் இழுத்தனர். வரும், 29ல், சுவாமி பல்லக்கு உற்சவமும், 30ல், சயனோற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராஜா செய்து வருகிறார்.