உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாரியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்தூர் அருகே உள்ள, இந்திரா நகர் கிராமத்தில், மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 25ல் அம்மனுக்கு படையல் வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மதியம், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், கரகம் அலங்கரிக்கப்பட்டு, கோவில் பூசாரிகள் எடுத்து ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. அலகு குத்தி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மதியம், 2:00 மணிக்கு கோவில் முன், சாட்டை அடித்து பேயோட்டும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !