உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்துார் வெங்கடாசலபதி கோயில் தேரோட்டம்

சாத்துார் வெங்கடாசலபதி கோயில் தேரோட்டம்

சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபதி கோயில் ஆனி பிரமோத்ஸவ விழா  தேரோட்டத்தில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சாத்துாரப்பன் என அழைக்கப்படும் சாத்துார் வெங்கடாசலபதி கோயில் தென் திருப்பதிகளில் ஒன்றாகும். இக்கோயில் ஆனிபிரம்மோத்ஸவ விழா ஆண்டு தோறும்  விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் 20ல்    கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவை  தொடர்ந்து தினமும் சுவாமி ,பூதேவி, ஸ்ரீதேவி   ரத வீதிகளில்   வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை 7:30 மணிக்கு தேரில் சுவாமி எழுந்தருள 11:00 மணிக்கு தேேராட்டம் துவங்கியது. பக்தர்கள் ரங்கா, ரங்கா, பாண்டுரங்கா என கோஷமிட்டப்படி  வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 1:30மணிக்கு நிலையை வந்தடைந்தது. அன்னதானமும் வழங்கப்பட்டது. கோயில்நிர்வாக அலுவலர் தனலட்சுமி தலைமையில்   அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !