பழநி முருகன் கோயிலில் உலகநலன் வேண்டி அன்னாபிஷேக விழா
ADDED :2701 days ago
பழநி:
உலகநலன் வேண்டி, பழநி முருகன் கோயிலில் துவங்கி, திருஆவினன்குடி,
பெரியநாயகியம்மன், பெரியாவுடையார் ஆகிய கோயில்களில் அன்னாபிஷேக விழா
நடந்தது.
பழநி மலைக்கோயிலில் ஜூன் 26ல் அன்னாபிேஷக விழாவை முன்னிட்டு, யாக பூஜைகள் நடந்தது. உச்சிக்காலத்தில் மூலவருக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தில் கிரீடம் சூட்டி பூஜை நடந்தது.நேற்று (ஜூன் 29ல்) கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகவிழா நடந்தது. கந்தவிலாஸ் விபூதிஸ்டோர் செல்வகுமார், நவீன்விஷ்னு, நரேஷ்குமரன் ஏற்பாடுகளை செய்தனர். இதேபோல திருஆவினன்குடி கோயிலும், பெரியநாயகியம்மன் கோயிலில் சாயராட்சை பூஜையில், குழந்தை வேலாயுதசுவாமி, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடந்தது. கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்தனர்.