உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சனூர் கோயிலில் குடிநீரின்றி பக்தர்கள் அவதி

குச்சனூர் கோயிலில் குடிநீரின்றி பக்தர்கள் அவதி

சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்த ‘மினரல் வாட்டர் பிளான்ட்’ சேதமடைந்ததால்  பக்தர்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர்.பரிகார தலமான குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் தோஷ நிவர்த்திக்காக வருகின்றனர். சுரபி நதியில் நீராடி, கொடி மரத்தில் எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனிதிசை நடப்பவர்களின் சிரமம் மாறும் என்பது ஐதீகம். இதனால் சனிக்கிழமை தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகமிருக்கும். இவர்களின் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ‘மினரல் வாட்டர் பிளான்ட்’  பொருத்தப்பட்டது. இதில் சுடு தண்ணீர் பிடிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. பக்தர்களிடம் வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தால் தண்ணீர் பாட்டில் விற்பனை பாதிக்கப்பட்டது. மர்ம நபர்களால் இயந்திரம் அடிக்கடி பழுடைந்தது. போலீசில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. இந்த இயந்திரம் இயங்காததால் கோயில் வளாகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறையினர் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !