உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாற்றூரில் இன்று திருக்குடமுழுக்கு விழா

நல்லாற்றூரில் இன்று திருக்குடமுழுக்கு விழா

மயிலம்: நல்லாற்றுாரில் இன்று தமிழ் முனிவர் சிவப்பிரகாசருக்கு திருக்குடமுழுக்கு விழா நடக்கிறது. மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலாய சுவாமிகள் திருமடத்தின் கிளை மடம், புதுச்சேரி அடுத்த நல்லாற்றுாரில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த  இந்த மடத்தில் விநாயகர், தண்டயுதபாணி, தமிழ் முனிவர் சிவப்பிரகாசர் சுவாமிகளுக்கு திருக்குடமுழக்கு விழா, இன்று காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள்  செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !