உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டரமாணிக்கம் கோயிலில் கும்பாபிேஷகம்

கண்டரமாணிக்கம் கோயிலில் கும்பாபிேஷகம்

திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் இன்று நடைபெறுகிறது.மாணிக்கநாச்சி அம்மன் கோயிலில் திருப்பணி முடிந்து யாகசாலை பூஜை பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் ஜூன்27 ல்  துவங்கியது. நேற்று காலை 8:45 மணிக்கு நான்காம் யாகசாலை பூஜைகளும், மாலையில் ஐந்தாம் யாகசாலை பூஜை முடிந்தன. இன்று காலை 5:00 மணிக்கு ஆறாம் யாகசாலை பூஜை துவங்குகிறது. தொடர்ந்து காலை 8:00 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம்  புறப்பாடாகி காலை 8:30 மணிக்கு கும்பாபி ேஷகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 9:00 மணிக்கு கலச அபி ேஷகம் மற்றும் தீபாராதனையும், காலை 10:30 மணிக்கு மகா அபி ேஷகம், தீபாராதனை நடைபெறும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !