பாதை மாறிய நதி
ADDED :2703 days ago
கேரளாவிலுள்ள காலடியில் அவதரித்தவர் ஆதிசங்கரர். இவரின் தாயார் ஆர்யாம்பாள், அங்கு ஓடும் பூர்ணா நதியில் நீராடுவார். இதற்காக வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் நடந்த களைப்பில் ஆற்றங்கரையில் ஆர்யாம்பாள் மயங்கி விழுந்தார். வீட்டுக்கு வர தாமதம் ஆனதால், தேடிச் சென்ற சங்கரர் தாயாரின் நிலை கண்டு வருந்தினார். இதற்கு முடிவு கட்ட எண்ணி சங்கரர் ஆற்றங்கரைக்கு ஓடினார். “பூர்ணா நதித்தாயே! தாயாரால் நடக்க முடியவில்லை. யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காதே! ஊருக்குள் இருக்கும் என் வீட்டின் அருகில் வா” என்று வேண்டினார். அன்றிரவே திசை மாறிய நதி, காலடி ஊருக்குள் ஓடியது. திடீர் வெள்ளத்தால் அங்கிருந்த கிருஷ்ணன் கோயில் அடித்துச் செல்லப்பட்டது. அப்பகுதியை ஆட்சி செய்த மன்னரின் உதவியுடன், சங்கரர் மீண்டும் கோயில் கட்டினார்.