சோமநாதேஸ்வரர் கோவிலில் 13ம் ஆண்டு தொடக்கவிழா
ADDED :2651 days ago
வீரபாண்டி: சோமநாதேஸ்வரர் கோவிலில், 13ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சிறப்பு அபி?ஷகம், யாகம், பூஜை நடந்தது. சேலம், அம்மாபேட்டை, நாமமலையிலுள்ள, பஞ்சமுக சோமநாதேஸ்வரர் கோவில், 13ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, நேற்று காலை, கணபதி யாகம் நடந்தது. மலை அடிவாரத்தில், கிணற்றிலிருந்து புனிதநீரை கலசங்களில் எடுத்துக்கொண்டு, கோவில் நிர்வாகிகள், ஊர்வலமாக மலையேறி சென்றனர். அதை, யாகசாலையில் வைத்து, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, புனிதநீரை மூலவர் பஞ்சமுக லிங்கத்துக்கு அபி?ஷகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வரும், 8 காலை, சேலம், பட்டைக்கோவில் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில், சோமநாதருக்கு, 108 சங்காபி ?ஷகம், திருக்கல்யாண உற்சவம், மாலை, நந்தி வாகன ரத ஊர்வலம் நடக்கவுள்ளது.