தலைவாசல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2879 days ago
தலைவாசல்: மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தலைவாசல், சிறுவாச்சூரிலுள்ள, செல்வ மாரியம்மன் கோவிலில், ஆனி மாத திருவிழா நடக்கிறது. நேற்று காலை, கருப்பையாவுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வணங்கினர். தொடர்ந்து, காளிக்கோட்டை இடிப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை, மாரியம்மன் தேரோட்டம் நடந்தது. அதில், சிறப்பு அலங்காரத்தில் அம்மனை எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து, திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வந்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர். சிறப்பு பூஜை செய்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர், அம்மனை தரிசித்தனர். இன்று, துர்க்கையம்மன், அய்யனார் சுவாமிகளுக்கு, தேரோட்டம் நடக்கிறது.