அணையா விளக்குகள்: பக்தர்கள் நெகிழ்ச்சி
ADDED :2652 days ago
திருமங்கலம், திருமங்கலம் மீனாட்சி- சொக்கநாதர் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சன்னதி, பைரவர் சன்னதி முன்பாக அணையா விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் காட்டுப்பத்திரகாளியம்மன் கோயிலிலும் அம்மன் சன்னதி முன் அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெகிழ்ச்சி அடைந்துள்ள பக்தர்கள் விளக்கிற்கு தேவையான நெய் வழங்கி வருகின்றனர். தனியாக தீபம் ஏற்றி வழிபடும் வசதியும் அனைத்து சன்னதிகளிலும் செய்யப்பட்டுள்ளன என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.