கோவில் பூஜை விவகாரம்: அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
ADDED :2653 days ago
ப.வேலூர்: கண்டிபாளையத்தில், கோவில் பூஜை நடத்துவது தொடர்பாக, இருதரப்பினரிடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை, சுமுக முடிவு எட்டப்படாததால், ஒத்திவைக்கப்பட்டது. ப.வேலூர் அடுத்த, வடகரையாத்தூர் கண்டிபாளையத்தில் உள்ள பகவதி அம்மன், ஓங்காளி அம்மன் கோவில் பூஜை நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த, அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று மாலை, ப.வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் ருக்மணி தலைமை வகித்தார். இதில், இருதரப்பினரிடையே எவ்வித சுமுக முடிவும் எட்டப்படாததால், தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இறுதி முடிவு எட்டப்படும் வரை, இருதரப்பினரும் கோவிலில் எவ்வித பூஜையும் செய்யக்கூடாது என, தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். டி.எஸ்.பி., ராஜூ, வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.