10ல் காகத்தலையம்மன் கோவில் திருவிழா
ADDED :2653 days ago
மல்லசமுத்திரம்: வரும், 10ல், கருமனூர் காகத்தலையம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. மல்லசமுத்திரம் ஒன்றியம், கருமனூரில் கற்பகவிநாயகர், கரிய விநாயகர், கூத்தாண்டேஸ்வரர், கரியகாளியம்மன், காகத்தலையம்மன் ஆகிய கோவில்களில் வரும், 10ல் திருவிழா நடக்கவுள்ளது. இதைமுன்னிட்டு, ஜூன், 26ல் அம்மனுக்கு பூச்சாட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் அபி?ஷக, ஆராதனை, அலங்கரிக்கப்பட்ட சிறியதேரில் மெரமனை நடந்தது. வரும், 10 காலை, 9:00 மணிக்கு, பெரிய அம்மனுக்கு பொங்கல் வைத்தல், முப்போடு அழைத்தல்; மாலை, 4:00 மணிக்கு சின்னஅம்மனுக்கு பொங்கல் வைத்தல், முப்போடு அழைத்தல், வாண வேடிக்கை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, நிர்வாகிகள் செய்துள்ளனர்.