ஆனந்தாஸ்ரமத்தில் குரு ஆராதனை விழா
ADDED :2653 days ago
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஆனந்தாஸ்ரமத்தில், குரு ஆராதனை விழா நடந்தது. நாமகிரிப்பேட்டை ஆனந்தாஸ்ரமத்தில், பெத்தன்ன சுவாமிகளின், 73வது குரு ஆராதனை விழா நேற்று முன்தினம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு யாக பூஜையுடன் விழா தொடங்கியது. 9:00 மணிக்கு அபி?ஷக, ஆராதனை; 10:00 மணிக்கு பக்திப் பாடல்கள்; 11:00 மணிக்கு ஆன்மிக சிந்தனை பட்டிமன்றம் நடந்தது. மனிதனை மனிதனாக மதிக்கச் செய்வது அருட்செல்வரா, பொருட் செல்வரா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றம் நடந்தது. பகல், 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது.