உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா: தூக்குத்தேரை எடுத்து பக்தர்கள் பரவசம்

செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா: தூக்குத்தேரை எடுத்து பக்தர்கள் பரவசம்

மோகனூர்: வாழவந்தி செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கோலாகலமாக நடந்தது. மோகனூர் அடுத்த, எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், எஸ்.வாழவந்தி, சின்னகரசப்பாளையம், பெரியகரசப்பாளையம், கே.ராசாம்பாளையம், காளிபாளையம், பெரமாண்டம்பாளையம் உட்பட, 18 கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது. பல்வேறு காரணங்களால், கடந்த, நான்கு ஆண்டுகளாக திருவிழா தடைபட்டது. பல கட்ட பேச்சுவார்த்தையில், சமரசம் ஏற்பட்டதையடுத்து, கடந்த, 28ல், அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா துவங்கியது. தினமும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சுவாமி ரதம் ஏறி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை, 5:00 மணிக்கு, சுவாமி ரதம் ஏறினார்.அதையடுத்து, மாவிளக்கு பூஜை, எல்லை உடைக்கப்பட்டது. மேலும், உயிருடன் உள்ள செம்மறி ஆட்டின் ஈரலை எடுத்து பூஜை செய்து, பூசாரி வாயில் வைத்து அருகில் உள்ள கிணற்றில் விடும் ஊமைப் புலிகுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. தூக்குத்தேரை எடுத்து, பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். இரவு, 8:00 மணிக்கு தேர் நிலை அடைந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !