அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2649 days ago
பரமக்குடி, பரமக்குடி அருகே பொதுவக்குடி கிராமத்தில் பூரணை, புஷ்கலை சமேத கூரிச்சாத்த அய்யனார் கோவில்கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக ஜூலை 1ல் மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது. இரவு 7:00 மணிக்குமேல் யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூஜைகள்நடந்தது. மறுநாள் காலை 6:00 மணி தொடங்கி 2ம் காலயாகபூஜைகளும், மகாபூர்ணாகுதி நிறைவடைந்து,கும்பம் புறப்பாடாகியது. காலை 10:00 மணிக்கு கும்பம்கோயிலை வலம் வந்து, கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை பொதுவக்குடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.