உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணபதி கோவில் கும்பாபிஷேகம்

கணபதி கோவில் கும்பாபிஷேகம்

கிணத்துக்கடவு:வடசித்துார் அருகே, செல்லப்பகவுண்டன்புதுாரில் கற்பக மகாகணபதி ஆலய, மூல மந்திரமூர்த்தி கும்பாபிஷேக ேஹாம விழா இன்று நடக்கிறது. வடசித்துார் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகிராமம் செல்லப்பகவுண்டன்புதுார். இக்கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான கற்பக மகாகணபதி கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, இன்று மகா கணபதி மூலமந்திர ேஹாமங்கள் நடத்தப்படுகிறது. முன்னதாக, நேற்று மாலை விக்னஷே்வரா பூஜை, வேத உபசாரங்கள், மகாதீபாராதனை நடந்தது. இன்று காலை, இரண்டாம்கால கலச பூஜையை தொடர்ந்து, காலை, 9:00 -10:00 மணிக்குள் அபிஷேகம், கலச தீர்த்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும் பிறகு, அன்னதானமும் நடக்கிறது. நேற்றைய சிறப்பு பூஜையில், சுற்றுப்பகுதி கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !