பொற்கோவில் ஆண்டு விழா: யானை மீது ஐயப்பன் பவனி
ADDED :2647 days ago
சத்தியமங்கலம்: ஐயப்பன் பொற்கோவில் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு, யானை மீது, ஐயப்ப சுவாமி வீதியுலா வந்தார். சத்தியமங்கலத்தில், பண்ணாரி சாலையில், பழைய தபால் நிலைய வீதியில், ஆற்றங்கரையில் ஐயப்பன் பொற்கோவில் அமைந்துள்ளது. கடந்தாண்டு புதிதாக கட்டப்பட்டு குப்பாபிஷேகம் நடந்தது. முதலாமாண்டு விழாவை முன்னிட்டு, ஐயப்ப சுவாமி, யானை மீது வைக்கப்பட்டு, நேற்றிரவு ஊர்வலமாக சென்றது. எஸ்.ஆர்.டி.,கார்னர் பகுதியில், ஒவ்வொரு வீதி வழியாகவும், ஊர்வலமாக அழைத்து கொண்டு, பொற்கோவில் அருகேயுள்ள, பவானி ஆற்றில் நீராதனை செய்து, பின் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான, பக்தர்கள் கலந்து கொண்டனர்.