உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, பொய்யாமணி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட மகா மாரியம்மன், மகாகாளியம்மன், மகா செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. கடந்த, 3 காலை, 8:00 மணியளவில் பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றில் இருந்து, பொது மக்கள், பக்தர்கள் மேளதாளத்துடன், புனித நீர் எடுத்து வந்து, மூன்று கோவில்களில் சிறப்பு அபி ஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் யாக சாலையில் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !