ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
ADDED :2695 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலில், ரங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிேஷகத்தை முன்னிட்டு, காவிரியாற்றில் இருந்து, தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி, யானையின் மீது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆனி ஜேஷ்டாபிஷேகம் கடந்த 27ம் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. ஜேஷ்டாபிேஷகத்தை முன்னிட்டு, காவிரியாற்றில் இருந்து, தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி, யானையின் மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட, தாயார் சன்னதியில் உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம், மங்களஆரத்தி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.