கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு
ADDED :2693 days ago
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர், கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாத ஸ்ரீராம பஜனை சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. ஸ்ரீராம பஜனையில் ராமமூர்த்தி திருமால் வணக்கம் செய்தார். அறக்கட்டளை நிர்வாகி துரை பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஜெயராமன் தலைமை தாங்கினார். ஜனார்த்தனன் சிறப்புரை நிகழ்த்தினார். நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டு நடந்தது. விழா குழுவினர் எட்டியப்பிள்ளை, சாமிகண்ணு, பெருமாள், அருணகிரி, அப்புபிள்ளை, வேணுகோபால், கிருஷ்ணவேணி, சுதர்சனம், ராமசாமி உபயதாரர்கள் பத்மநாபன், ஜக்குபாய் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜானகிராமன் நன்றி கூறினார்.