காஞ்சி வரதர் கோவில் செயல் அலுவலர், சஸ்பெண்ட்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், செயல் அலுவலராக இருந்த விஜயன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில், தியாகராஜன் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், மே, மாதம் நம்மாழ்வார் சாற்றுமுறை நடந்தது. அதில், இரு பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதனால், பூஜை பாதியில் நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தப் பிரச்னை குறித்து, ஆணையருக்குப் புகார் அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அறநிலையத் துறை கூடுதல் இயக்குனர், இணை ஆணையர், வருவாய்க் கோட்ட அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், விஜயன் விடுப்பில் சென்றார். அவருக்குப் பதில், குமரகோட்டம் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், கடந்த மாதம், 28 முதல், கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.இதுகுறித்து, இணை ஆணையர் அசோக்குமார் கூறுகையில், வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த பிரச்னை தொடர்பாக, விஜயன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்றார்.