காரமடை அரங்கநாதர் கோவிலில் கிருஷ்ணபட்ச ஏகாதசிவிழா
ADDED :2747 days ago
காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆனி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசிவிழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் அருள்பாலித்தார். ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, ஸ்ரீதர் பட்டர்ஆகியோர் சாற்று முறை சேவித்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் செய்திருந்தார்.