உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிங்கபுரம் கோவிலில் நாளை ஆனி தேரோட்டம்

நரசிங்கபுரம் கோவிலில் நாளை ஆனி தேரோட்டம்

நரசிங்கபுரம்: பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில். இங்கு இந்தாண்டு ஆனி பிரம்மோற்சவம், 5ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆனி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நாளை, காலை, 6:00 மணிக்கு நடைபெறும். பின், இரவு, 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெறும். திருவிழா, 15ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு பெறும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !