மாரியம்மன் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED :3012 days ago
தலைவாசல்: அரிய நாச்சியம்மன் கோவிலில், மாரியம்மன் தேரோட்டம் நடந்தது. தலைவாசல், புத்துாரிலுள்ள, அரிய நாச்சியம்மன் கோவிலில், கடந்த, 4ல், காப்பு கட்டுதலுடன், தேர் திருவிழா தொடங்கியது. நேற்று மாலை, வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தேரில், மாரியம்மனை எழுந்தருளச் செய்து, முக்கிய வீதிகள் வழியாக, திரளான பக்தர்கள், வடம்பிடித்து இழுத்து, ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து,சிறப்பு பூஜை செய்து, மஹா தீபாராதனை காட்டப்பட்டது.ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர். இன்று, அரிய நாச்சியம்மன்,பச்சை நாச்சியம்மன் தேரோட்டம் நடக்கிறது.