உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கையில் ருத்ராட்ச மரம்

சிவகங்கையில் ருத்ராட்ச மரம்

சிவகங்கை, சிவகங்கை அருகே வாகுளத்துப்பட்டியில் ருத்ராட்ச மரம் வளர்ந்துள்ளது. குளிர்ந்த பகுதிகளில் மட்டுமே வளரும் ருத்ராட்ச மரம் வாகுளத்துப்பட்டி சர்வசேவா பள்ளி வளாகத்தில் வளர்க்கப்படுகிறது. ருத்ராட்சத்தில் ஒன்று முதல் 21 முகம் வரை உண்டு. இதில் ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்ச மரம் இங்கு வளர்க்கப்படுகிறது.


ஏப்ரல், மே மாதங்களில் பூக்கிறது. ஜூனில் காய்க்க துவங்கி, அக்டோபரில் பழுக்கிறது. பக்தியோடு இம்மரத்தை பாதுகாத்து வருகின்றனர். ஆசிரியர் போஸ் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. இதில் அரசு, ஆல், வில்வம், விளா, நாகலிங்கம், எட்டி, கடுக்காய், மகிழமரம், மாவலிங்கம், உத்ராட்சம், வன்னிமரம், அரளி, மந்தாரை, திருவோடு, வெப்பாலை, பாலை, ஆத்தி என, 17 தெய்வீக மரங்கள் உள்ளன. அவற்றை கவனத்துடன் பாதுகாக்கிறோம். மேலும் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்களுக்குரிய மரங்களும் உள்ளன. மாணவர்களுக்கு மரங்களின் பலன்களை பயிற்றுவிக்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !