உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டு பெரியநத்தம் சேப்பாட்டியம்மன் கோவில் தேரோட்டம், இன்று (ஜூலை 14)ல் நடக்கிறது.

செங்கல்பட்டு பெரியநத்தம் சேப்பாட்டியம்மன் கோவில் தேரோட்டம், இன்று (ஜூலை 14)ல் நடக்கிறது.

செங்கல்பட்டு: பெரியநத்தம் பகுதியில், புகழ்பெற்ற சேப்பாட்டிய ம்மன் கோவில் உள்ளது. புராண காலத்தில், வனப்பகுதி நடுவில், குளுந்தியம்மன் கோவில் இருந்ததாகவும், அதன் அருகே ஓடிய சிற்றொடை வெள்ளத்தில், சேப்பாட்டியம்மன் சிலை கரை ஒதுங்கியதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, கோவில் கருவறையில், குளுந்தியம்மன், சேப்பாட்டியம்மன் என, இருவரும் எழுந்தருளியுள்ளனர். ஒரே கருவறையில், அருகருகே இரண்டு அம்மன்கள் இருப்பது, இக்கோவிலின் சிறப்பு.

சேப்பாட்டியம்மனுக்கு, ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், இராபிறையார் உற்சவம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு, இராபிறையார் உற்சவம், 10ம் தேதி துவங்கியது. இராபிறையார் அம்மன் வீதியுலா, நேற்று (ஜூலை 13)ல் நடந்தது.

இன்று (ஜூலை 14)ல்  காலை, 7:00 மணிக்கு, தேரில், அலங்கரிக் கப்பட்ட சேப்பாட்டியம்மன் எழுந்தருளினார். கோவில் அருகே தேரோட்டம் துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, நகராட்சி அலுவலகம் அருகே நின்றது. இங்கிருந்து, நாளை(ஜூலை 15)ல் காலை, 7:00 மணிக்கு, அம்மனை பக்தர்கள் வழிபட்ட பின், மாலை, 5:00 மணிக்கு கோவிலை வந்தடையும். விழா ஏற்பாடு களை, செயல் அலுவலர், செந்தில்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !