ஆடி முதல் பூரம்: அவதார ஸ்தலத்தில் எழுந்தருளிய ஆண்டாள்
ADDED :2639 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஆடிமாதம் முதல் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு அவதார ஸ்தலத்திற்கு எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டாளுக்கு உகந்த ஆடிமாதம் முதல் செவ்வாய்கிழமையன்று முதல் பூர நட்சத்திரம் வருவது இரு வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் வரும். இந்த வருடமும் நேற்று முதல் பூரம் என்பதால், காலை 11:00 மணியளவில் ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அவதார ஸ்தலமான நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.