பழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை
ADDED :2657 days ago
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 9 வரை தினசரி மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி லட்சார்ச்சனை நடக்கிறது. ஆகஸ்ட் 10ல் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடைபெறவுள்ளது. நேற்று முதல் ஆடிவெள்ளியை முன்னிட்டு, மாலையில் முத்தங்கி அலங்காரத்தில் லட்சார்ச்சனை நடந்தது. திருஆவினன்குடி கோயில் துர்க்கையம்மன், கிரிவீதி காளிகாம்பாள் கோயில், வனதுர்க்கை, மகிஷாசூரமர்த்தனி, லட்சுமிபுரம் மகாலட்சுமி, நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.