பிரசாதம் இது பிரமாதம்: பகாளாபாத்
என்ன தேவை:
அரிசி – 100 கிராம்
பால் – 100 மி.லி.
தயிர் – 100 மி.லி.
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4
காரட் – 1
இனிப்பு மாங்காய் – சிறிய துண்டு
தக்காளி – 1
குடை மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை – 1 இணுக்கு
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம், உப்பு – தேவையான அளவு
செய்வது எப்படி: சாதத்தை சற்றுக் குழைவாக வேக வைக்கவும். தோல் நீக்கிய இஞ்சி, காரட், மாங்காய், தக்காளி, குடை மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சிறு சிறு துண்டாக நறுக்கவும். பெருங்காயத்தை தூளாக்கவும். வாணலியல் சிறிது நெய் விட்டுக் காய்ந்தபின் முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகள் செய்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின், கடுகு, பெருங்காயத்தை இடவும். கடுகு வெடித்தபின், குடை மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி முதலியவற்றை சேர்த்து சற்று வதக்கி எடுக்கவும். களிம்பேறாத பாத்திரத்தில் சாதத்தை நன்றாக மசித்து, உப்பு, தயிர், பால், வெண்ணெய், வதக்கிய சாமான்கள், முந்திரிப்பருப்பு, காரட், மாங்காய், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். சுவையான பகாளாபாத் தயாராகி விடும்.