உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பால் மறைந்த தழும்பு

அன்பால் மறைந்த தழும்பு

மாவீரன் அலெக்சாண்டரின் அரண்மனையில் இருந்த ஓவியர் ஒருவருக்கு, அலெக்சாண்டர் மீது அளவில்லாத அன்பு.  பல ஆண்டுகள் சிரமப்பட்டு அலெக்சாண்டர் ஓவியம் ஒன்றை வரைந்தார். வரைந்து முடித்துவிட்டு அதைப் பார்த்த போது, அலெக்சாண்டரின் முகத்தில் காணப்பட்ட ஒரு தழும்பு அந்த ஓவியத்தின் அழகை குறைத்தது. ஓவியருக்கு  மிகவும் கஷ்டமாக இருந்தது. எனவே, அலெக்சாண்டரின் கையால், முகத்தில் உள்ள தழும்பை மறைத்து, ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல வரைந்தார். அலெக்சாண்டர் அந்தப் படத்தைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி யடைந்து கேட்டார்,“ஓவியரே என் முகத்தில் இருந்த வீரத் தழும்பு எங்கே?”  எனக் கேட்க “உங்கள் மீதான என் அன்பு, அதை மூடிவிட்டது” என்று பதிலளித்தார். ’அன்பு திரளான பாவங்களை மூடும்’ ’அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்குப் பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது. இறுமாப்பாயிராது”  என்கிறது பைபிள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !