உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி தீர்த்த கரையில் வாகன நெரிசல்: பக்தர்கள் அவதி

அக்னி தீர்த்த கரையில் வாகன நெரிசல்: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் அவதிப்பட்டனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் ஆயிரத்துக்கு மேலான வாகனத்தில் வருகின்றனர். இந்த வாகனங்கள் கோயில் ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்கவும், பக்தர்கள் நலன் கருதி ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் வாகனங்கள் நிறுத்த போலீசார் தடை விதித்தனர். வாகனங்கள் கோயில் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து பக்தர்கள் நடந்து கோயிலுக்கு சென்றனர். துவக்கத்தில் அக்னி தீர்த்த கரையில் வாகனம் நிறுத்தவிடாமல் தடுத்த போலீசார், காலப்போக்கில் கண்டு கொள்ளாமல் விட்டனர்.

வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை கோயில் பார்க்கில் நிறுத்திட அங்கு பணியில் உள்ள போக்குவரத்து போலீசார் ஒழுங்கு படுத்தாமல் விடுவதால், அக்னி தீர்த்த கரை அருகே ஏராளமான வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அக்னி தீர்த்த கரைக்கு பக்தர்கள் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே அக்னி தீர்த்த கரையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசாருக்கு மாவட்ட எஸ்,பி.,ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !