எரிச்சநத்தம் மாசாணியம்மன் ஆடி உலா
ADDED :2718 days ago
தேனி: விருதுநகர் அருகே எரிச்சநத்தம் ஸ்ரீமாசாணியம்மன் குட முழக்கு 2011 ல் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் அம்மன் உலா ஆடி மாதங்களில் நாகமலை புதுக்கோட்டை, உசிலம்பட்டி, தேனி ஆகிய ஊர்களில் உள்ள மாசாணியம்மன் மன்றங்களில் நடக்கும். நேற்று தேனி கோயில் நிறுவனர் இளஞ்செழியன் இல்லத்தில் உள்ள மன்றத்தில் அம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.