உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருநாதசுவாமி கோவில் பண்டிகை: ரூ.6.81 லட்சத்துக்கு கடைகள் ஏலம்

குருநாதசுவாமி கோவில் பண்டிகை: ரூ.6.81 லட்சத்துக்கு கடைகள் ஏலம்

அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் பண்டிகை, அடுத்த மாதம் ஆக.,8ல் தொடங்குகிறது. இந்நிலையில் தற்காலிக கடைகள் அமைக்க ஏலம் அறிவிக்கப்பட்டது. அதிக தொகை நிர்ணயம் செய்திருப்பதாக கூறி, இரண்டு முறை, வியாபாரிகள் ஏலத்தை புறக்கணித்தனர். இதனால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது முறையாக, அந்தியூர் யூனியன் அலுவலகத்தில், நேற்று ஏலம் நடந்தது. புதுப்பாளையம் பாலத்தில் இருந்து, வனப்பகுதி வரை மட்டும் கடைகள் அமைக்க ஏலம் விடப்பட்டது. அந்தியூர் பி.டி.ஓ., முருகேசன், அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். அந்தியூர், புதுப்பாளையத்தை சேர்ந்த சேமசுந்தரம், 6.81 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். மீண்டும் அடுத்த ஏலம் வரும், 27ல் நடக்கும். இதில், புதுப்பாளையம் பாலத்தில் இருந்து, வெள்ளைபிள்ளையார் கோவில் வரை, கடைகள் மற்றும் சைக்கிள் ஸ்டேண்ட் அமைக்க ஏலம் விடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !