உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலம்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

சித்தலம்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

வழுதாவூர் : சித்தலம்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நேற்று நடந்தது. வழுதாவூர் அடுத்த சித்தலம்பட்டு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சாகை வார்த்தல் விழா நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல், செடல் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !