உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா

தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நடந்த புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புனித சந்தியாகப்பர் சர்ச் 476ம் ஆண்டு திருவிழா ஜூலை 16ல் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது.நேற்று முன்தினம் இரவு நடந்த திருவிழா சிறப்பு திருப்பலி பூஜையை ராமநாதபுரம் மறைவட்ட அதிபர் அருள்ஆனந்தன், பாதிரியார்கள் பென்சிங்ராஜன், ராஜஜெகன் நடத்தினர். பின் விழாவில், புனித சந்தியாகப்பரின்’ தபால் உறை’யை மதுரை மண்டல இயக்குநர் தாமஸ்லுார்துராஜ் வெளியிட, அமைச்சர் மணிகண்டன் பெற்று கொண்டார். மாவட்ட வக்கீல் சங்க தலைவர்ரவிசந்திரராமவன்னி பேசினார்.பின் அலங்கரித்த தேரில் சந்தியாகப்பர் எழுந்தருளி தேர்பவனி வீதி உலா வந்தது. விழாவில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, துாத்துக்குடியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழு தலைவர் சந்தியாதாஸ், நிர்வாகிகள் அந்தோணிராஜ், அந்தோணி சந்தியாகு, சகாயராஜ், ஜெபஸ்தியான், லுார்துசாமி, சேவியர்குரூஸ், பட்டம்கட்டி சமுதாய தலைவர் பரஞ்ஜோதி, பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !