வேதபுரீஸ்வரர் கோவிலில் அணையா விளக்கு பொருத்தம்
ADDED :2730 days ago
செய்யாறு: வேதபுரீஸ்வரர் கோவிலில், நேற்று அணையா விளக்கு பொருத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவத்தூர் பகுதியில், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற நூற்றாண்டு பழமையான பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்வர். இவ்வாறு, வரும் பக்தர்கள், தீபமேற்ற வசதியாக உபயதாரர்கள் மூலம் அணையா தீபம் பொருத்தப்பட்டது. இதில், கோவில் செயல் அலுவலர் உமேஷ்குமார் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.