ராமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2629 days ago
வழுதாவூர்: நெற்குணம் ராமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. வழுதாவூர் அடுத்த நெற்குணம் கிராமத்தில் பழமையான ஆனந்த விநாயகர், ராமேஸ்வரர், பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ராமேஸ்வரர், விநாயகர், பாலமுருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நெற்குணம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோவில், வழுதாவூர் கயிலாயநாதர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.