விநாயகர் சிலை தயாரிப்பு பணி பரமக்குடியில் தீவிரம்
பரமக்குடி: சதுர்த்தி விழாவிற்காக பரமக்குடியில் விநாயகர் சிலைகள் செய்யும்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆண்டு தோறும்விநாயகர் ஊர்வலம் நடப்பது வழக்கம். இதற்காக ராமநாதபுரம் ராமேஸ்வரம், மண்டபம், பரமக்குடி என பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவர். இதனையொட்டி பரமக்குடியில் சிம்மம், யானை, கருடன்,சிவன், காளை மீது என அமர்ந்த நிலையில் நுாற்றுக்கணக்கான சிலைகள் செய்து வருகின்றனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த சிலை தயாரிப்பாளர்கள் ஆண்டு முழுவதும் விநாயகர் சிலைகளைசெய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சதுர்த்திக்கு முன்பாக அந்தந்த ஊர்களில் தேவைப்படும்சிலைகளை கொண்டு வந்து, வர்ணம் பூசி விற்பனை செய்வர்.இதன் படி பரமக்குடியில் 3 அடி தொடங்கி, 10 அடி வரையிலானநுாற்றுக்கணக்கான சிலைகளை செய்து வருகின்றனர். இவை ஆக., 30 அன்று சதுர்த்தி விழாவில் பூஜை செய்யப்பட்டு, பின்னர்ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும்.