பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரமோத்ஸவம்
ADDED :2677 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரமோத்ஸவ விழாவில் பெருமாள் தவழும் கண்ணன் கோலத்தில் அருள்பாலித்தார். இக்கோயிலின் ஆடி பிரமோத்ஸவ விழா ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பெருமாள் காலை, மாலை அன்ன, சிம்ம, சேஷ, கருட,அனுமன் வாகனத்தில் வீதியுலா வந்தார். ஜூலை 24 ல் யானை வாகனத்தில் வீதிவலம் வந்த பெருமாள், தாயார் சன்னதி முன்பு ஆண்டாள்,பெருமாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் பூப்பல்லக்கில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பட்டணப்பிரவேசம் வந்தார். நேற்று காலை 10:00 மணிக்கு நவநீதக்கண்ணனாக தவழும் திருக்கோலத்தில் பட்டுப்பல்லக்கில் வீதிவலம் வந்தார். தொடர்ந்து கிழக்குப் பகுதி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் எழுந்தருனார். இன்று ஆடி தேரோட்டம் நடக்கவுள்ளது.