கன்யகா பரமேஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு
திருவள்ளூர் : திருவள்ளூர், கொண்டமாபுரத்தில், கன்யகா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி வெள்ளிக்கிழமைதோறும், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை, 7:30 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும், மாலை, 7:00 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும். 20ம் தேதி, ஆடி வெள்ளி முதல் வாரத்தில், 102 புடவைகளுடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி வெள்ளி ௨வது வாரத்தில், 102 மஞ்சள்களால் சிறப்பு அர்ச்சனையும், மூன்றாம் வெள்ளி (ஆக., 3ல்) திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. ஆடி வெள்ளி நான்காவது வாரத்தில் (ஆக., 10ல்) தன ஆகர்ஷன பூஜையும், ஆடி பூரத்தன்று (ஆக., 13ல்) கன்யகா பரமேஸ்வரி அம்மனுக்கு வளையல் அலங்காரமும் நடைபெறும். ஆடி மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை பால் குட அபிஷேகம் நடைபெறும். பிரதி மாதம் பவுர்ணமி, அமாவாசை விசேஷ தினங்களில், காலை, 10:00 மணி அளவில் இக்கோவிலில் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறுகிறது.