கிருஷ்ணசாயி துவாரகமாயி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ADDED :2678 days ago
மந்தாரக்குப்பம்: நெய்வேலி வட்டம் 27ல் உள்ள ஷீரடி சாயி சேவா சமிதியின் கிருஷ்ணசாயி துவாரகமாயி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 8:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 10:30 மணியளவில் கடம் புறப்பாடாகி சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. பக்தர்கள் சாயி பஜன் பாடல்களை பாடி வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை ஷீரடி சாயி சேவா சமதி நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். இன்று 27ம் தேதி குருபூர்ணிமா விழா நடக்கிறது.