உக்கிர பாண்டியன் அவதாரம்!
ADDED :2624 days ago
பிராட்டியார் கர்ப்பவதியானார். நன் நாளில் முருகன் அவதரித்தாற் போன்ற அழகு அமைந்தவனைப் பெற்றெடுத்தார். மக்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. வருணன், இந்திரன், மலையரசன் முதலானோர் கண்டதுமே அஞ்சும் தன்மை படைத்தத் தம் மகனுக்கு ""உக்கிர வர்மன் என்று பெயரிட்டார் ஈசனார். தக்க பருவத்தில் இறைவனின் ஆணைவழி வியாழ பகவானே குருவாக வாய்த்து உக்கிரவர்மனைச் சிறந்த கல்வியாளராக்கினார். எட்டு வயதிலே, எல்லாக் கலைகளிலும் தேர்ந்தான். ஆண்டுகள் கழிய - தக்க பருவம் எய்தினான் உக்கிரவர்மன். இறைவனும் பிராட்டியும் மகனுக்கு மணமுடித்து முடிபுனைய விரும்பினர்.