மூங்காத்தம்மன் கோவிலில் ஆடி வெள்ளி கொண்டாட்டம்
ADDED :2626 days ago
திருவள்ளூர்: பெரியகுப்பம் மூங்காத்தம்மன் கோவிலில், ஆடி வெள்ளி 2வது வார விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர். திருவள்ளூர், பெரியகுப்பத்தில் மூங்காத்தம்மன் கோவில் உள்ளது. இப்பகுதி மக்கள், எல்லை தெய்வமாக வழிபடும் இக்கோவிலில் நேற்று, ஆடி வெள்ளி, 2வது வார விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு பாலாபிஷேகம் துவங்கி, ஆராதனை நடைபெற்றது. காலை, 9:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அம்பாள், பூரண வெள்ளி கவசத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர், பெரியகுப்பம், ராஜாஜிபுரம், என்.ஜி.ஓ., காலனி, எம்.ஜி.ஆர்., நகர் ஆகிய பகுதிகளிலிருந்து, திரளான பக்தர்கள், கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு, அம்மனை வழிபட்டனர். ஆடி மாதம் முழுவதும், மூங்காத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.