உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வி அம்மன் கோவில் பூக்குழி உற்ஸவ விழா

செல்வி அம்மன் கோவில் பூக்குழி உற்ஸவ விழா

முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்வி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு வேல்குத்தி, பறவை காவடியுடன்,பால்குடம் எடுத்து பூக்குழியில் இறங்கினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,பால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்து  நேர்த்தி கடனை செலுத்தினர். கோவில் நிர்வாக கெளரவத்தலைவர் பாலகுருசாமி தலைமை தாங்கினார். தலைவர் எஸ்.வடமலையான், செயலாளர் ராமலிங்கம்,பொருளாளர் பெருமாள்,துணைத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலையில் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பெண்கள் வீட்டில் இருந்து பூத்தட்டுகளை கையில் ஏந்திக்கொண்டு முக்கிய வீதிகளில்  ஊர்வலமாக சென்றனர், இரவில் பூப்பல்லக்கில் அம்மன் சிலை ஊர்வலம் நடந்தது.  வாண வேடிக்கை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !