ஷீரடி சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா சிறப்பு பூஜை
ADDED :2629 days ago
சேலம்: ஷீரடி சாய்பாபா கோவிலில், குருபூர்ணிமாவை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தட்சிணாயன காலம் தொடங்கும் ஆடி மாத முதல் பவுர்ணமி, குருபூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, சேலம், கோரிமேட்டிலுள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில், காலை முதல், சிறப்பு அபி ?ஷகம் செய்து, வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சாய் பஜனை, மஹா தீபாராதனை நடந்தது. மாலை, சாவடி எனும் பல்லக்கு ஊர்வலத்தில், சாய்பாபா உருவப்படம், ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், சேலம், ஜங்ஷன் முல்லை நகரிலுள்ள சாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது.