சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா
ADDED :2629 days ago
நாமக்கல்: நாமக்கல், சாய் தபோவனத்தில் குரு பூர்ணிமா விழா விமரிசையாக நடந்தது. நாமக்கல், வள்ளிபுரம் அடுத்த தொட்டிப்பட்டியில் அமைந்துள்ள சாய் தபோவனத்தில் குருபூர்ணிமா விழா நடந்தது. நேற்று காலை, 8:30 மணிக்கு சாயி சத்திய விரத பூஜையுடன் விழா துவங்கி, தொடர்ந்து, சாயி சத்சரிதம் பாராயணம், கூட்டுப்பிராத்தனை, ஆரத்தி, சாயி நாம ஜெபம் ஆகியவை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தி, மாலை, 6:00 மணிக்கு தரிசனம், தொடர்ந்து ஆரத்தி நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.