மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு: ஏராளமானோர் தரிசனம்
நாமக்கல்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, மாரியம்மன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபி ?ஷகம் செய்யப்பட்டு, மலர் மாலையால் அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு செம்பட்டு உடுத்தி, மஞ்சள் அலங்காரத்தில் அருள் பாலித்தார். விரதம் இருந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.
* புதன் சந்தை அடுத்த, முத்துடையார்பாளையம் மாரியம்மன் கோவிலில், உலக மக்கள் நன்மைக்காக, விவசாயம் செழிக்க வேண்டி, 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாரதனை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
* குமாரபாளையம், காளியம்மன் கோவிலில் அம்மன் வேப்பிலை அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மன் நகர் ஐயப்பன் கோவில், இதே வளாகத்தில் உள்ள விநாயகர், மஞ்சமாதா, முருகன், நாகர் உள்ளிட்ட பல சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காட்டூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார, ஆராதனை நடந்தது. கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவில், வளையக்காரனூர், கள்ளிபாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், குமாரபாளையம் வட்டமலை முருகன், பாலமுருகன், தம்மண்ணன் வீதி தேவாங்கர், 24 மனை மாரியம்மன், அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர், மருதமலை முருகன், சின்னப்பநாயக்கன்பாளையம் அங்காளம்மன், மாரியம்மன் முருகன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.